April 22, 2021
  • Home
  • Technology News
  • Sri Krishna College of Engineering And Technology 18th Graduation Day || APTN NEWS

Sri Krishna College of Engineering And Technology 18th Graduation Day || APTN NEWS

By on July 22, 2020 0 64 Views
Reommended Links



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 18 – வது பட்டமளிப்பு விழா

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 18 -வது பட்டமளிப்பு விழா இக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அலுவலர் முன்னேற்றத் துறையின் சர்வதேச தலைவர் பி.பி.கொட்டூர் கலந்து கொண்டு பட்டமளித்து உரையாற்றினார்.
இதில் இவர் பேசுகையில்

தினமும் கற்றுக்கொள்வதை பழக்கமாக்க வேண்டும். ஒன்னும் தெரியாது என நினைத்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பினை முடித்தாலும் தினமும் கற்பதை விடக்கூடாது. புதிய விஷங்களை கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்தும் ஒன்னும் தெரியாது என நினைத்து மறுபடியும் கற்றுக்கொள்ளவேண்டும். உலகில் புதிய விசயங்களை தினமும் கற்பதுதான் தலை சிறந்த ஆயுதம். நிறுவன வளர்ச்சியில் நுகர்வோர் முக்கிய பங்கினை வகிப்பதுடன், இதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தினை நிர்ணயிப்பவர்களும் நுகர்வோர்களே. எனவே அனைத்து நிறுவனங்களும் நுகர்வோர்களுக்கு முன்னுரிமையினை கொடுங்கள். உலகில் அனைவரும் சமம் என்னும் நிலையினை கொண்டுவர வேண்டும். உலகில் உள்ள அனைவரையும் சரியாக, சமமாக, எந்த வேறுபாடு மற்றும் வித்தியாசமின்றி நடத்த வேண்டும். இளைஞர்கள் தலைச்சிறந்த குடிமகன்களாக வரவேண்டும். எந்த நிலையினை அடைந்தாலும் பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும்.எனக் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெகுமதி துறையின் மூத்த இயக்குனர் மற்றும் சர்வதேச தலைவர் பாஸ்கர் திவாரி பேசுகையில் படித்தவர்களுக்கு பட்டம் பெற்றது வாழ்க்கையில் முன்னேற முதற் படியாகும், இதனுடன் நிறுத்திவிடாமல், வாழ்க்கையில் சாதனை புரிய இனிமேல்தான் கடினமாக உழைக்க வேண்டும். வரும் வாய்ப்பினை கைவிடாமல் இருக்க தொழில் நுட்பத்தினை உங்களின் வேலையில், தொழிலில் புகுத்துங்கள். குறிக்கோளினை அடைய திறந்த மற்றும் பரந்த மனம் வேண்டும் எனக் கூறினார்.

இவ் விழாவில் 12 ஆராய்ச்சியாளர்கள், இளங்கலைப் பிரிவில் 1062 பேர், முதுகலைப் பிரிவில் 212 உட்பட மொத்தம் 1286 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. மேலும் இதில் பல்கலைக்கழக அளவில் 29 ரேங்க் பெற்ற மாணவ-மாணவியர்கள் கவரவம் செய்யப்பட்டார்கள்.

இந்த பட்டமளிப்பு விழாவினை இக் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார். மேலும் இதில் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கே.சுந்தரராமன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட், கல்லூரி அறிக்கையினை வாசித்தார். பேராசிரியர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

47 − 38 =